சென்னை:நாடு முழுவதும் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம். இப்படத்தின் வெளியீட்டை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் இப்போதிருந்தே தயாராகி வருகின்றனர்.
விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இதில் நடிகர் அஜித்குமார் பல மாஸான கெட்டப்பில் நடித்திருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இப்படத்தின் மூன்று கதாபாத்திரங்களைக் கொண்ட போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதில் ஹீரோ நல்லவனா, கெட்டவனா, அல்லது இரண்டும் கலந்திருப்பானாக என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வந்தனர். அதேபோல் பல கெட்டப்பில் அஜித் இடம்பெற்றுள்ள ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் படத்திற்கு எந்தவித பிரமோஷனும் செய்யவில்லை என்றாலும் கூட படத்தின் கதை சார்ந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜீ.வி பிரகாஷின் இசை, மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு என படம் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் கொண்ட குட் பேட் அக்லி திரைப்படம் காமெடி, எமோஷன், சென்டிமென்ட், ஆக்சன் என அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை தியேட்டரில் ஓப்பனிங் ஷோவை ரசிப்பதற்காக கடந்த வாரம் ஃப்ரீ புக்கிங் தொடங்கி தற்போது அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது.அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணியில் அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், சிம்ரன், பிரியா வாரியர், பிரசன்னா, யோகி பாபு, உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாக உள்ளது. இதனால் படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து வருகின்றனர். நாளை படம் வெளியானதை தொடர்ந்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் முதல் வாரமே படம் வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் இதுவரை அஜித் படங்கள் படைக்காத சாதனையை இந்த குட் பேட் அக்லி திரைப்படம் சம்பவம் செய்ய காத்திருக்கு எனவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் படத்தின் விமர்சனங்கள் எப்படி இருக்கிறது, முதல் நாள் வசூல் வேட்டை எப்படி இருக்கிறது என்று.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}