சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் புதிய ஃபெராரி காரை வாங்கியுள்ளார். அந்த காருடன் நடிகர் அஜித் குமார் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அஜித் கடந்த 2 வருடங்களாக நடித்து வரும் படம் தான் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பல மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.
படத்தின் ஷூட்டிங் முடிந்து, ரிலீஸ் தேதி முடிவு செய்வதற்கு முன்னதாக இப்போதே படத்தின் வியாபாரத்தை துவக்கி விட்டது படக்குழு. டிவி வெளியீட்டு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி ரிலீஸ் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வாங்கி விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த இரு நிறுவனங்களும் ரூ.250 கோடிக்கு விடாமுயற்சி படத்தை வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.225 கோடி தான். இந்த படத்திற்கு அஜித்திற்கு சம்பளமாக மட்டும் ரூ.160 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில், துபாய் சென்ற அஜித் ரூ.9 கோடிக்கு ஃபெராரி காரை வாங்கியுள்ளார். கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்ஸில் அதிக விருப்பம் கொண்டவர் அஜித்குமார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பைக் மற்றும் கார் ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். கார் மற்றும் பைக் ரேசின் போது பல விபத்துகளில் சிக்கிய அஜித்குமார், பல சர்ஜரிகளை செய்திருந்தும், அவருக்கு கார் மற்றும் பைக் மீது குறையாத காதலுடன் உள்ளார்.
அஜித்திடம் ஏற்கனவே ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ள நிலையில், தற்போது ஃபெராரியையும் வாங்கி இணைத்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}