ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!

Jan 14, 2025,01:03 PM IST

சென்னை: துபாய் கார் ரேசில் தனது அணிக்குக் கிடைத்த வெற்றிக்காக தன்னை வாழ்த்திய ரசிகர்கள், பல்துறைப் பிரமுகர்களுக்கு நடிகர் அஜீத் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.


நடிப்பில் பிசியாக உள்ள அஜீத் அவ்வப்போது கார் பந்தயங்களிலும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது கார்ப் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். மேலும் கார் பந்தயங்களில் அதிக அளவில் பங்கேற்பதற்காக தனது நடிப்புக்கான காலத்தையும் கூட அவர் சுருக்கி விட்டார். தற்போது ஆறு மாதம் மட்டுமே நடிப்பு, மற்ற ஆறு மாதமும் கார்ப்பந்தயம் என்ற முடிவையும் அவர் எடுத்துள்ளார்.


இந்த நிலையில் துபாயில் நடந்த கார்ப் பந்தயத்தில் அவரது அணி போட்டியிட்டு 3வது இடத்தைப் பிடித்து அசத்தியது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களும் கூட அஜீத்தை வாழ்த்திக் கொண்டுள்ளனர்.




இந்த வாழ்த்துகளால் அஜீத் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்கு தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அதில், துபாய் கார் பந்தய ரேசின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.


இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது.


இந்த பயணம் என்னை பற்றியது மட்டுமல்ல, உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் அஜீத்குமார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்