ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியை காண சென்றபோது திரையரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து தற்போது உயிருக்குப் போராடி வரும் நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை போலீசார் அனுமதியுடன் இன்று மருத்துவமனையில் சென்று சந்தித்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில், உள்ளிட்ட பலர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் பான் இந்தியா படமாக கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி மூன்றே நாட்களில் 600 கோடி ரூபாயை வசூலில் சாதனை படைத்தது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வந்தது.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தில் டிசம்பர் நான்காம் தேதி இரவு 9.40 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியைப் பார்க்க திரளான ரசிகர் பட்டாளங்கள் ஒன்று கூடினர். அப்போது பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி, மகன் சாய் தேஜா மற்றும் மகளுடன் வந்ததார். நடிகர் அல்லு அர்ஜூனைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் வந்ததால் திரையரங்கில் தள்ளுமுள்ளு நடைபெற்றது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (39) மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் தேஜா காயமடைந்தார். காயமடைந்த மகன் தேஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் இழப்பீடு வழங்கினார். சிறுவன் தேஜாவின் மருத்துவ செலவையும் பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் தேஜா. இதுதொடர்பான வழக்கில் ஹைதராபாத் போலீஸார் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்த நிலையில் சிறுவன் தேஜாவை, மருத்துவமனையில் சென்று சந்திக்க நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தார். ஆனால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும், மருத்துவமனைக்கு அல்லு அர்ஜுன் வந்தால் மேலும் கூட்டம் நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்பதாலும் அனுமதிக்க போலீஸார் மறுத்து வந்தனர்.
இதற்கிடையே, காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவ செலவை ஏற்றுள்ள அல்லு அர்ஜுனை காண போலீசார் அனுமதி மறுப்பது குற்றம் என பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை சென்று சந்திக்க அனுமதி தெரிவித்திருந்த நிலையில் இன்று அல்லு அர்ஜுன் படுகாயம் அடைந்த சிறுவனை மருத்துவமனையில் சென்று சந்தித்தார். போலீஸ் பாதுகாப்புடன் சென்று அல்லு அர்ஜூன், சிறுவனை சந்தித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}