சென்னை: வெறுமனே இரங்கல் என்று இதை சொல்லி விட முடியாது. எனது அண்ணனே இறந்து விட்டது போல வேதனைப்படுகிறேன்.. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து ஆனந்தராஜ் கூறியதாவது:
மிகவும் மனதிற்கு கவலையாக இருக்கு. அவர் இறந்ததற்கு நிறைய காரணம் சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாள் அவரு நம்ம கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் அவர் குடும்பத்தாருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுத்தவர். நல்ல மனிதர் பல ஆண்டுகள் அவர் கூட நான் பழகிட்டு வரேன். நட்புக்கு நல்ல மரியாதை கொடுக்க கூடிய அவர், ஒரு அண்ணன் மாதிரி குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்வாரு நானும் நல்ல முறையில் தான் பழகி வந்தேன்.
30 ஆண்டு காலமாக அவரோட நான் பயணிச்சிருக்கேன். அவர் தனி ஒரு பாலிசி வச்சிருப்பாரு, நட்புரீதியில் அவர் கூட இருந்ததுனால சொல்றேன் அவரு ரெண்டு பிள்ளைங்களுக்கு திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த மாதிரி இறந்திருந்தா கூட பரவால்ல. இன்னும் கொஞ்சம் கால அவரும் நம்ம கூட இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நடிகர் சங்கத்தில் அவர் தலைவரா இருக்கும்போது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லாம் பணியையும் செஞ்சுருக்கோம். நட்பு ரீதியா ஒரு சங்கத்துக்கு எவ்வளவோ செஞ்சு இருக்காரு. அவரு செஞ்சது எல்லாம் என் கண் முன்னாடியே இருக்கு. ரொம்ப அன்பானவரு. எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவரு எல்லாருக்கும் கொடுக்குற மரியாதை ரொம்ப பிடித்த விஷயம். உண்மையில் அவரு சாகல அவரு நம்ம கூட தான் இருக்காரு. அவர் இறந்துட்டாருன்றது என்னால ஏத்துக்கவே முடியல. அவர் நீண்ட காலம் இருக்கணும்னு தான் என்னோட ஆசை. கலைஞராகவும் நடிகராகவும் அவர் நீண்ட காலம் இருந்திருக்கணும் என்றார் ஆனந்தராஜ்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}