சென்னை: நடிப்பு சலித்துவிட்டால் பார்ஸிலோனாவில் டிரைவராகிவிடுவேன் என்று நடிகர் பகத் பாசில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு பகத் பாசில், வடிவேலு கூட்டணியில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பகத் பாசில், வடிவேலு இருவரும் இணைந்து தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் மாரீசன். இந்த திரைப்படம் ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தை மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பகத் பாசில், வடிவேலு, கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் புரமோஷனின் போது பேசிய பகத் பாசில், ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்துவிட்டால், பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன். மக்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு அழைத்து கொண்டு போய் சேர்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஒருவர் சென்றடையும் இலக்கை அறிந்துகொள்வது மிக அழகான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
நெருங்கும் தீபாவளி...தங்கம் வெள்ளி விலை எவ்வளவு உயர்வு தெரியுமா?
விண்வெளி நாயகா.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று!
மும்பை பங்குச் சந்தை.. உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்.. அமெரிக்க பேச்சுவார்த்தை எதிரொலி
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 15, 2025... இன்று மாற்றங்களை காண போகும் ராசிகள்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
{{comments.comment}}