தனுஷின் புதிய படத்திற்கு என்ன பெயர் தெரியுமா..?

May 22, 2025,04:59 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் கமிட்டான புதிய படத்திற்கு கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயரிடப்பட்டுள்ளது.


நடிகர் தனுஷ் முதலில் நடிகராக  அறிமுகமாகி, பின்னர் மெல்ல மெல்ல தனது விடாமுயற்சியால் உயர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து மக்கள் மனதில் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார்.


இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பாடகராகவும், தயாரிப்பாளராகவும், பன்முகத் திறமைகளை பெற்றுள்ளார்.மேலும் இயக்குனராகவும் களமிறங்கிய நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்தை நடித்து,இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து மீண்டும் நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் திரைப்படத்தை இயக்கினார்.




ஆனால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இதனை எடுத்து தனுஷ் நடிப்பில் இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மெய்ன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆக வரிசை கட்டி உள்ளன. கோலிவுட்டில் தற்போது இட்லி கடை திரைப்படம் வெளியீட்டிற்கு  தயாராகி வருகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்து வருகின்றனர். அதே சமயத்தில் தனுஷ் தேரே  இஷ்க் மெய்ன் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.


இதற்கிடையே இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை மெர்குரி பிக்சர்ஸ்  தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், திரைக் கதையை கமலஹாசன் எழுத இருக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மீது அதிகரித்தது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்  மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் நடிகர் தனுஷ்  புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த புதிய படத்திற்கு கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆதி புரூஸ் இயக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்