- மஞ்சுளா தேவி
சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மிகவும் அருமையாக நடித்துள்ளார். ஒரு பெர்பார்மராக உருவெடுத்துள்ளார். அற்புதமான படைப்பு.. கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தை திருடிவிடும் என நடிகர் தனுஷ் புகழ்ந்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா படம் வெளிவந்தது. இந்த படம் மதுரை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது . ஒரு தாதா கதைதான்.. ஆனால் அதில் காமெடியைக் கலந்து மதுரை ஸ்டைலில் படத்தைக் கொடுத்ததால் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதேபோன்று தற்போது அதன் 2ம் பாகத்தை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளிவந்தபோதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லாரன்ஸ் வழக்கத்திற்கு மாறாக தன் தோற்றம் மேனரிசம் முதல் அனைத்தையும் மாற்றி வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக குடும்பங்களை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த ஹாரர் படங்கள் மூலம் பல வெற்றிகளை தந்தவர். சமீபத்தில் வெளிவந்த சந்திரமுகி 2 படத்திலும் அதே பாணியில் நடித்திருந்தார். இப்படம் சரியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா 2 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் இப்படத்தையும், நடிகர் ராகவாரன்ஸ் நடிப்பையும், பாராட்டியே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு .. அற்புதமான நடிப்பை தருவது எஸ் ஜே சூர்யாவுக்கு வழக்கமாகிவிட்டது. ஒரு நடிகராக லாரன்ஸ் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு அழகு . கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தை திருடிவிடும். படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷின் பதிவிட்டிற்கு நன்றி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள டிவீட்டில், சகோதரரே உங்கள் அன்பான வார்த்தைக்கு மிக்க நன்றி. உங்களின் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா ஸ்வாமியை பிரார்த்திக்கிறேன் என்று தனது நன்றியை பதிவிட்டுள்ளார்.
இரண்டு முன்னணி நடிகர்களின் சலனம் இல்லாத உரையாடல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .இதனை ரசிகர்கள் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த ஜெகமே தந்திரம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறியது நினைவிருக்கலாம்.
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
{{comments.comment}}