வேலூர்: பிரச்சாரத்தின் போது மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் சென்னை அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு விஷம் கலந்த பானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக இந்தத் தொகுதியில் விதவிதமா.. வித்தியாசமா.. என்ற தொலைக்காட்சி விளம்பரம் போல் கறி வெட்டுவது என்ன.. காய்கறி விற்பது என்ன.. ரிக்ஷா இழுப்பதென்ன.. பலாப்பழத்தைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்வது என்ன.. இப்படி பல நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. நெஞ்சில் வலிப்பது போல இருக்கவே, வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு ட்ரீட்மென்ட் கொடுத்தும் அவருக்கு வலி நிற்காத காரணத்தால் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு கே எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். அதில் அவர் கூறியதாவது:

நேற்று குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பி ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி பழ ஜூஸ் கொடுத்தாங்க. அதன் பிறகு மோர் கொடுத்தாங்க. குடிச்ச உடனேயே வண்டியில் இருந்து விழும் நிலையில் இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி. பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ட்ரீட்மெண்ட் கொடுத்தும் வலி நிற்கவில்லை.
வலி அதிகமான காரணத்தால் சென்னை கே எம் நர்சிங் ஹோமுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கூட்டிட்டு வந்து ஐ சி.யூ ல அட்மிட் பண்ணாங்க . இப்ப கொஞ்சம் வலி கம்மியா இருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக டிரிப்ஸ் கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என கூறப்படுகிறது என தகவல் கொடுத்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}