குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போகிறேன்.. நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு

Nov 26, 2023,10:46 AM IST

- சங்கமித்திரை


சென்னை: நடிகைகள் குஷ்பு, திரிஷா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.


சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகை திரிஷா குறித்துப் பேசியது சர்ச்சையான நிலையில் மன்சூர் அலிகானுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணையமும் தலையிட்டு அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இதையடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இதுதொடர்பாக மன்சூர் அலிகானை நேரில் வரவழைத்தும் போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணை முடிந்த நிலையில் திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டார் மன்சூர் அலிகான்.  திரிஷாவும் தவறு செய்வது மனித குணம்.. மன்னிப்பது கடவுள் குணம் என்று டிவீட் போட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது என்று எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது மறுபடியும் இந்த பிரச்சினையை முதலில் இருந்து ஆரம்பிக்கிறார் மன்சூர் அலிகான்.




அதாவது குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது வழக்குத் தொடரப் போவதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது பிஆர்ஓ கோவிந்தராஜு மூலமாக அவர் விடுத்துள்ள செய்தி:


குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் 

சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்!


11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய 'உண்மை வீடியோவை' தங்களுக்கு அனுப்பி உள்ளேன்.  இந்த வீடியோவை தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, திரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது!


உண்மை வீடியோவை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன்! மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளேன்! நன்றி! ---நடிகர் மன்சூர் அலிகான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இப்போது என்ன மாதிரியான பஞ்சாயத்து வெடிக்கப் போகிறது என்று தெரியவில்லை.


சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்