சென்னை: நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான நாசர் மகன் நூருல் ஹசன் ஃபைசல் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளார். இதனை அவரது தாயாரான கமீலா நாசர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தலைவரும், நடிகருமான நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் தீவிரமான விஜய் ரசிகர். இவருக்கு விஜய்யின் டான்ஸ், நடிப்பு மிகவும் பிடிக்குமாம். எப்போதும் விஜய் பற்றியே பேசுவாராம்.
இவர் சைவம் படத்தில் டெக்னீசியனாக பணியாற்றியவர். கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை ஈசிஆர் ரோட்டில் நடந்த விபத்தில் சிக்கி கோமா நிலையை அடைந்தார். அந்த சமயத்திலும் கூட "விஜய் விஜய்" என்று புலம்புவதாக டாக்டர்கள் நாசரிடம் தெரிவித்தனராம்.
உடனே நாசர் விஜய்க்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். உடனடியாக நாசர் வீட்டுக்கு விரைந்து வந்த விஜய், பைசலைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் பேசி விட்டுப் போயுள்ளார். பின்னர் கோமாவில் இருந்து மீண்ட பிறகும் கூட ஃபைசலை அடிக்கடி சென்று பார்த்து நலம் விசாரித்து வந்துள்ளார் நடிகர் விஜய். விஜய் என்றால் அந்த அளவுக்கு பைசலுக்கு உயிராம்.
உச்ச நடிகரான நடிகர் விஜய் அரசியலில் வருவார் என பல்வேறு தரப்பினரிடையே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். தற்போது கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விட்டுள்ளார். இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினராக இணைந்துள்ளனர்.
இந்த வரிசையில், விஜயின் தீவிர ரசிகரான ஃபைசலும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இவர் இருக்கும் ஏரியா, சென்னை மதுரவாயல் பகுதியாகும். பைசல், விஜய் கட்சியில் உறுப்பினராக சேர்ந்ததை நாசரின் மனைவி கமலா நாசர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}