ஆட ஆமாங்க.. நான் அஜீத் கூட நடிக்கிறேன்.. சூப்பர் மனுஷர்ங்க... ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகர் பிரசன்னா!

Oct 03, 2024,01:14 PM IST

சென்னை: அஜீத்துடன்  இணைந்து தான் நடிக்கப் போவதாக நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கியமான ஹீரோவாக வலம் வந்தவர் பிரசன்னா. அதன் பிறகு கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அவரது நடிப்பிலேயே அஞ்சாதே படத்தில் வந்த அந்த நெகட்டிவ் ஷேடுதான் இன்று வரை அவரது சிறந்த நடிப்புக்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது.  சென்னையில் ஒரு நாள் படத்திலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது.


இந்த நிலையில் தற்போது அஜீத்துடன் இணைந்து நடிக்கப் போகிறார் பிரசன்னா. இதை அவரே கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் போட்டுள்ள பதிவு:




எனது அருமை நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் ஒரு செய்தி.. இந்த முறை நமது அன்புக்குரிய தல அஜீத் குமாருடன் இணைந்து நடிக்கப் போகிறேன். கனவு நனவானது போல உள்ளது. மங்காத்தா டைமிலிருந்தே ஒவ்வொரு அஜீத் படம் அறிவிக்கப்படும்போதும் அதில் நான் இருப்பேனா என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே வந்தது. காரணம், ஒவ்வொரு படத்திலும் எனது பெயர் அடிபட்டது. அவரது ரசிகர்களும் என்னை வாழ்த்திக் கொண்டேதான் இருந்தனர். இப்போது அது உண்மையாகியுள்ளது.


அஜீத்தின் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன்.  பலமுறை கைக்கு வந்தது வாய்க்குக் கிடைக்கவில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இப்போது குட் பேட் அக்லி படத்தில் நான் நடிக்கவிருக்கிறேன்.  கடவுளுக்கு நன்றி, அஜீத்துக்கு நன்றி, ஆதிக் ரவிச்சந்திரன், சுரேஷ் சந்திரா சார், மைத்ரி மூவீஸ் ஆகியோருக்கும் நன்றி. 


அஜீத் படத்தில் நடிக்கவிருப்பது திரில்லாகவும் எக்சைட்டிங்காகவும் இருக்கிறது. இப்போது வேறு எந்த தகவலையும் தர முடியாது. சில நாள் ஷூட்டிங் முடிந்துள்ளது. ஒரு விஷயத்தை மட்டும் என்னால் சொல்ல முடியும்.. அஜீத்தை ஏன் இத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பதை அந்த சில நாள் ஷூட்டிங்கிலேயே தெரிந்து கொண்டேன். மிக மிக எளிமையான மனிதர், மனித நேயம் மிக்கவர், மிகவும் இயல்பாக பழகுகிறார்.. அனைத்துக்கும் நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பிரசன்னா.


சமீபத்தில்தான் பிரசன்னாவின் மனைவியும் நடிகையுமான சினேகா, விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் அசத்தலான ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் சினேகாவின் கணவர் பிரசன்னா, அஜீத்துடன் இணைந்து கலக்கப் போகிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்