சென்னை: நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் திருத்தணியில் ஜூன் 9ம் தேதி கல்யாணம் நடக்கப் போவதாக திருமண அழைப்பிதழ் வலம் வருகிறது.
தமிழ்த் திரையுலகில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலராக வலம் வரும் பிரேம்ஜிக்கு தற்போது ஜஸ்ட் 42 வயதுதான் ஆகிறது. இயக்குநர் - பாடலாசிரியர் கங்கை அமரனின் 2வது மகன். மூத்த மகனான இயக்குநர் வெங்கட் பிரபு திருமணமாகி அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் பிரேம்ஜி மட்டும் தொடர்ந்து பேச்சலராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும் எல்லோருமே எப்பப்பா கல்யாணம் என்றுதான் முதலில் ஆரம்பிப்பார்கள்.

இந்த நிலையில் கண்டிப்பாக இந்த ஆண்டு எனது திருமணம் இருக்கும் என்று சமீபத்தில் கூறியிருந்தார் பிரேம்ஜி. இந்தப் பின்னணியில் தற்போது ஒரு திருமண அழைப்பிதழ் வலம் வருகிறது. அதில் நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான அழைப்பிதழா அல்லது ஏதாவது வதந்தியா என்று தெரியவில்லை. இந்த திருமண அழைப்பிதழ் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக ஒரு பாடகியுடன் பிரேம்ஜிக்கு காதல் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வேறு ஒரு பெயர் மணப்பெண்ணாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தால் என்ன, பிரேம்ஜிக்கு கல்யாணம் நடந்தால் அதை விட சந்தோஷமான விஷயம் வேறு இருக்க முடியாது.. எத்தனையோ பேரை சிரிக்க வைத்து மகிழ்விப்பவர் பிரேம்ஜி.. அவரும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு சிறப்பு இருக்க முடியாது.. அட்வான்ஸ் கல்யாண வாழ்த்துகள் பிரேம்ஜி சார்!.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}