சென்னை: நடிகர் விஜய் கட்டியுள்ள சாய்பாபா கோவிலுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இன்று சாமி கும்பிட்டார்.
நடிகர் விஜய் தனது தாயாரின் விருப்பத்திற்காக அவர் விரும்பிய படி சாய்பாபாவிற்கு ஒரு கோவிலை கட்டியுள்ளார். சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் குறித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. காரணம் இந்த கோவில் கட்டப்பட்டது குறித்து எந்தவிதமான தகவலும் அதற்கு முன்பு வரை வெளியாகவில்லை. எனவே திடீரென இந்த கோவில் குறித்த செய்திகள் வெளியானதால் ரசிகர்களும் கூட ஆச்சரியமே அடைந்தனர்.
இந்த கோவில் குறித்து விஜயின் தாயாரம் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் கூறுகையில், எனக்கு சாய்பாபாவிற்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. எனது மகனிடம் சொல்லி இருந்தேன். அவர் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த சாய்பாபா கோவில் பிரபலம் அடைய ஆரம்பித்துள்ளது.
நடிகரும், விஜயின் நண்பர்களில் ஒருவருமான ராகவாலாரன்ஸ் இந்த கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை அங்கு ஷோபா சந்திரசேகர் ராகவா லாரன்சை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் சென்ற ராகவா லாரன்ஸ் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில் எனது நண்பன் விஜய் கட்டியுள்ள சாய்பாபா கோவிலுக்கு இன்று சென்றேன். என்னுடன் ஷோபா அம்மாவும் வந்திருந்தார்.
நான் ராகவேந்திரா சுவாமி கோவில் கட்டிய போது அவர் எனக்காக அந்த கோவிலுக்கு வந்து பாடி மகிழ்வித்தார். எங்களை வந்து ஆசீர்வதித்தார். இப்போது அவர் கட்டியுள்ள அந்த கோவிலுக்கு நான் அவருடன் சென்றுள்ளேன். என்னுடைய நண்பன் விஜய்க்கு எனது இதயம் மறந்து இதயபூர்வமான நன்றிகளும்.
இந்த கோவிலுக்கு வந்த போது எனக்கு மனம் நிறைந்த காணப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் தவறாமல் இந்த கோவிலுக்கு வந்து சாய்பாபாவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}