வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்கள் மனதில் நிற்பவர் "விஜயகாந்த்"..  ரஜினிகாந்த் உருக்கம்!

Dec 29, 2023,07:40 PM IST

சென்னை:  நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த்.. வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்கள் மனதில் நிற்பவர் விஜயகாந்த்  என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருடைய மரண செய்தி கேட்டு  பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் சோகக்கடலில் மூழ்கி  உள்ளனர். விஜயகாந்தின் மீது உள்ள அன்பால் அவரை கடைசியாக ஒரு முறையாவது பார்க்க முடியாதா என பல்வேறு பகுதிகளில் இருந்து அலைகடலென பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதனால் சென்னை மாநகரமே தற்போது ஸ்தம்பித்துள்ளது.


இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்று கன்னியாகுமரியில் சூட்டிங் நிறுத்திவிட்டு இன்று காலை சென்னை விரைந்தார். விமான நிலையத்திலிருந்து நேரடியாக தீவுத் திடலுக்கு வந்த ரஜினிகாந்த், விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.




பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விஜயகாந்த் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். விஜயகாந்த் குறித்துப் பேசியபோது அவர் நா தழு தழுக்க பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.


ரஜினிகாந்த் பேச்சு:


மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. விஜயகாந்த் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கு. நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த் அவர்கள். அவரிடம் ஒரு தடவை பழகிவிட்டால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவோம். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரையே கொடுக்க ரெடியா இருக்கிறார்கள். 


அவர் நண்பர்கள் மீது கோபப்படுவார். அரசியல்வாதிகள் மீதும் கோபப்படுவார். ஏன் மீடியாக்கள் மீதும் கோபப்படுவார். ஆனால் யாருக்கும் அவர் மீது கோபம் என்பது வராது. ஏனென்றால் அவருடைய கோபத்தின் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும். சுயநலம் இருக்காது. அன்பு இருக்கும். தைரியத்துக்கும், வீரத்துக்கும், இலக்கணமானவர்.


அவருடன் பழகிய எல்லோருக்கும் அவரைப் பற்றி சொல்ல எவ்வளவோ நினைவு இருக்கும். எனக்கும் நிறைய இருக்கு. அதில் இரண்டு மட்டும் முக்கியமானது. எனக்கு உடம்பு ரொம்ப சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் நான் சுயநினைவு இல்லாமல் அங்கு இருக்கும்போது, நிறைய மக்கள், மீடியாவால் அதிகம் தொந்தரவாக இருந்தது. அப்ப அங்கு  வந்த விஜயகாந்த்  ஐந்து நிமிஷத்துல என்ன பண்ணினார் என்று தெரியாது. எல்லோரையும் அங்கிருந்து போக சொல்லி அவர் ரூமுக்கு பக்கத்துல எனக்கு ஒரு ரூம் போடுங்க. நான் அண்ணனை பார்த்துக்கொள்கிறேன். எப்படி எல்லோரும் வராங்க என்று பார்க்கிறேன். இதை என்னால் மறக்கவே முடியாது.


அதேபோல் சிங்கப்பூர், மலேசியாவில் நடிகர் சங்கம் ஷோ முடித்து விட்டு வரும்போது எல்லோரும் பஸ்ஸில் ஏறி விட்டார்கள். நான் மட்டும் ஏற கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. எல்லோரும் சோர்வாக இருந்தார்கள். நான் ஐந்து நிமிடமாக திண்டாடினேன். யாராலும் ஒன்னும் பண்ண முடியவில்லை. பஸ்ஸில் இருந்து இறங்கி வந்தார் விஜயகாந்த். பின் அவர் ரெண்டு நிமிடத்தில் எல்லோரையும் அடித்து விரட்டி விட்டார். என்னை பத்திரமாக மீட்டு பூ மாதிரி கூட்டி வந்து உட்கார வைத்தார். அண்ணே உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே.. சோகமாக இருக்கிறீர்களே.. என கேட்டார்.


அந்த மாதிரியான மனிதரை கடைசி நேரத்தில் இப்படிப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கேப்டன் என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமான பெயர். வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி .. மக்கள் மனதில் யார்.. விஜயகாந்த் ..!வாழ்க விஜயகாந்த் நாமம் என்று கூறி நெகிழ்ந்தார் ரஜினிகாந்த்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்