சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்ள் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பின்னர் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் ஒன்றாக பார்த்து பார்த்து செய்து வருகிறார் விஜய். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியில் அறிமுகப் செய்தார். இந்த கொடியின் மேலும், கீழும் அடர் சிவப்பு மற்றும் நடுவில் மஞ்சள் நிறம் இடம்பெற்று இருந்தன. அதேபோல் நடுவில் இரண்டு போர் யானைகளுடன் வாகை மலரும் இருந்தது. இதனை தொடர்ந்து கட்சி பாடலையும் வெளியிட்டார். இப்பாடல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
விஜய் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்த சில மணி நேரத்திலேயே கட்சி கொடி தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளும் வழுக்கத்தொடங்கியது. பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதால் விஜயின் கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று அக்கட்சி தெரிவித்தது. அதேபோல செல்வம் என்பவர் விஜய் கட்சிக் கொடியில் பல்வேறு விதி மீறல்கள் இருப்பதாக சென்னை காவல் அலுவலகத்தில் விஜயின் மீது புகார் கொடுத்துள்ளார். அடுத்ததாக, விஜய் கட்சி கொடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என வெள்ளாளர் முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா சரவணன் என்பவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்து உள்ள நிலையிலும் பல்வேறு தலைவர்கள் விஜய் வெளியிட்ட கட்சிக் கொடிக்கும், கட்சி பாடலுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நடிகர் ரஜினிகாந்த்தும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவருக்கு எனது வாழ்த்தகள் என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}