சென்னை: எனது குழந்தைகள் எனக்கு உயிர். அவர்களுக்காகவே நான் நிறைய தியாகம் செய்திருக்கிறேன் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் தெரிவித்திருந்தார். இவர்களுடைய விவகாரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவரும் பிரித்து தற்போது தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவிற்கு பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. இதனை கண்டித்து ஆர்த்தி கடந்த சி தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, ரவிமோகன் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நான் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கின்றேன். இது விளையாட்டு அல்ல. என் வாழ்க்கை. நான் பல ஆண்டுகளாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கின்றேன். இத்தனை ஆண்டுகளாக என் பெற்றோரையே பார்க்க விடாமல் தனிமைப்படுத்தப்பட்டேன். அப்படி இருந்தும் கூட என் திருமண வாழ்க்கையை காப்பாற்ற நினைத்தேன். இனியும் இப்படி வாழ முடியாது என்று தெரிந்த பின்னர் தான் அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தேன். அந்த முடிவை எளிதில் எடுக்கவில்லை.
நான் யாரையும் குறை கூற வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன். ஆனால், என் மவுனத்தை குற்ற உணர்ச்சியாக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வைத்து என் கேரக்டர், ஒரு தந்தையாக என் மீது பொய் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளது. அது எல்லாம் பொய். பணத்திற்காகவும், சிம்பதிக்காகவும் என் பிள்ளைகளை பயன்படுத்துவது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது. நான் என்பிள்ளைகளை பார்க்க கூடாது பேசக் கூடாது என்பதற்காக என்பிள்ளைகளுடன் பவுன்சர்களை அனுப்பி வைக்கிறார்கள்.
என் மகன்கள் கார் விபத்தில் சிக்கினார்கள். அவர்களை கூட என்னால் பார்க்க முடியவில்லை. எந்த அப்பாவிற்கும் இப்படி நடக்கக் கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக என் அப்பா, அம்மாவிற்கு ஒரு பைசா கூட கொடுக்க விடவில்லை. என்னை கணவனாக இல்லை பொன்முட்டையிடும் வாத்தாக தான் அவர்கள் நடத்தினார்கள். காதல் என்கிற பெயரில் என்பணம், சொத்து என எல்லாவற்றையும் தனக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். அவரின் அம்மா வாங்கிய பல கோடி கடனுக்கு என்னை கட்டாயப்படுத்தி சூரிட்டி கையெழுத்து போட வைத்தார்கள்.
எனது குழந்தைகள் எனக்கு உயிர். அவர்களுக்காகவே நான் நிறைய தியாகம் செய்திருக்கிறேன். ஆனால் அவர்களை என்னிடம் இருந்து பிரிக்க, உண்மையை வலுக்கட்டாயமாக மாற்ற என் மீது பொய்கள் பரப்புவது என்னை உடைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
கெனிஷா பிரான்சிஸைப் பொறுத்தவரை, நீரிங் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்த ஒரு தோழி. எனது பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போது கெனிஷா எனக்காக நின்றார்.
நான் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியவர் கெனிஷா. அவரின் நடத்தையையும் தொழிலையும் அவமதிக்கும் ஒரு சிறிய கிண்டலை கூட நான் அனுமதிக்க மாட்டேன். குடும்பத்துடன் மிரட்டி பணம் பறிப்பவர்களை என்னை விட வேறு யாரும் அதிகமாக புரிந்து கொள்ள முடியாது. கெனிஷா உடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமே இல்லாதவாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எனக்கு உண்மை தெரியும். என்னை பற்றி அறிந்தவர்களுக்கு என் நன்றி உணர்வும் தெரியும். என்னை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், கெனிஷாவுக்கு அதையே செய்வீர்கள் என நம்புகிறேன்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்
தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல்
"ஹலோ.. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா".. From Shared Telephones to Endless Updates!
பரமபதம் விளையாட்டு.. முன்னோர்கள் வகுத்து வந்த அபாரமான விளையாட்டு!
Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
நான் வெறும் உடன்பிறப்பு மட்டுமல்ல—.. If I stand strong today!
{{comments.comment}}