சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ரவி மோகன் தொடங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். நடிகர் ரவி மோகன் பராசக்தி மற்றும் கராத்தே பாபு ஆகிய 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இன்று புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். அதற்கு ரவி மோகன் ஸ்டூடியோஸ் என பெயரிட்டு உள்ளார். இதன் தொடக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனம் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிவ ராஜ்குமார் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த விழாவில் எஸ்.ஜே சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், தயாரிப்பாளராக இருந்தால் ஒரே விஷயம் நாம் எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருக்க வேண்டும். ரவி சாரின் இந்த முயற்சியில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் உருவாகும். அவருடைய பேனரில் நானும் ஒரு திரைப்படம் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ள 2 படங்களில் ஒன்றை கார்த்திக் இயக்குகிறார்.இப்படத்திற்கு Bro Code என பெயரிடப்பட்டுள்ளனர். இதில் ரவி மோகன் ஹீரோவாக நடிக்க அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். இதையடுத்து அவர் தயாரிப்பில் உருவாக உள்ள மற்றொரு படத்தின் பெயர் An Ordinaru Man. இப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இயக்குனராகவும் அறிமுகமாகிறார் ரவி மோகன். இந்த இரண்டு படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டது.
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ரவி மோகன்... இயக்குனராகவும் அவதாரம்!
அது என்ன 39% ஓட்டுக் கணக்கு.. அமைச்சர் அமித்ஷா சொன்னது இதைத் தானா?
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம்.. காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!
குருதிப்பூக்கள் (சிறுகதை)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!
வந்துருச்சு "பிள்ளையார் சதுர்த்தி".. பூரண கொழுக்கட்டை பண்ணலாமா?
{{comments.comment}}