சென்னை: தனது வீட்டுக்கு முன்பு தேங்கி நின்ற மழை நீரை பெரிய சைஸ் குச்சியை வைத்து அடைப்பு எடுத்து விட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் மழைக்காலம் வந்தாலே பின்னாடியே வெள்ளமும் அசைந்தாடி வந்து சேரும். அதுவும் புயல் காலமாக வந்து விட்டால் போதும்.. ஊரே வெள்ளக்காடாகி விடும். இந்த நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் அரசு நிர்வாகங்கள், மழை நீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் அதை டிரெய்ன் செய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளன. பொதுமக்களும் கூட ஆங்காங்கே களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கண்ணில் ஒரு வீடியோ பட்டது.. பளிச்சென்ற காவி நிற (ஆரஞ்சு நிறம்னும் கூட சொல்லலாம்) டி சர்ட், ஷார்ட்ஸ் போட்ட ஒருவர் அந்த வீடியோவில் காணப்படுகிறார். தனது வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருக்கிறார் அவர்.. ஒரு நாயை கொஞ்சுகிறார். அந்த இடத்தில் மழை நீர் வெள்ளம் போல தேங்கிக் கிடக்கிறது.
பின்னர் பெரிய சைஸ் குச்சியை வாங்கிய அவர் அடைப்புகளை எடுத்து விடுகிறார். மேலும் அங்கு பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்களிடமும் பேசுகிறார்.. அவர்களைப் பாராட்டுகிறார். அவர்களது பணியைப் பாராட்டிப் பேசுகிறார். அவர் யார் தெரியுமா.. அவர்தாங்க நம்ம குபீர் சிரிப்பு நாயகன் எஸ்.வி.சேகர். மக்கள் பணியாற்றும் ஊழியர்களைத் தட்டிக் கொடுத்து அவர்களுடன் துணை நின்றாலே பல பிரச்சினைகளையும் நாம் எளிதில் சமாளித்து விட முடியும்.. மழை வெள்ளத்தையும் கூட கடந்து வந்து விட முடியும்.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்துக்குள் வடிந்து செல்லக்கூடிய வழியில் இரவு பகலாக பணியாற்றும் சென்னை கார்ப்பொரேஷன் களப்பணியார்களுக்கும், அதிகாரிகளுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும் என்று கூறியுள்ளார்.
மாநகராட்சிப் பணியாளர்களைப் பாராட்டிய எஸ்.வி.சேகரையும் பாராட்டுவோம்.. மாநகரப் பணியாளர்களையும் இரட்டிப்பு நன்றியோடு பாராட்டுவோம்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}