சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பயோபிக் படத்தில் அவரது வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கப் போவதாக பிஆர்ஓ நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் பல தலைவர்களின் சாயல் கொண்டவர். குறிப்பாக திராவிடத் தலைவர்களின் உருவ சாயல் கொண்டவர். பெரியார் வேடத்தில் அசத்தியவர். அச்சு அசலாக பெரியாரையே நேரில் பார்த்தது போல இருந்தார் அந்த வேடத்தில். உண்மையில் தீவிரமான பெரியார் பக்தரும் கூட. பெரியாரின் கருத்துக்களுக்கு தீவிர ஆதரவாளரும் கூட.
அதேபோல திராவிடத் தலைவர்களில் இன்னொரு முக்கிய தலைவரான எம்ஜிஆர் போல தத்ரூபமாக தோன்றுவார் சத்யராஜ். ஒரு படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் ஒரு காட்சியில் வந்திருப்பார். இந்த நிலையில் இப்போது இன்னொரு தலைவரின் வேடம் பூணவுள்ளார் சத்யராஜ். அவர்தான் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி பயோபிக் உருவாகவுள்ளதாம். அதில் நரேந்திர மோடி வேடத்தில் சத்யராஜ்தான் நடிக்கப் போகிறாராம். இதுகுறித்த மேல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று திரைப்பட பிஆர்ஓ நிகில் முருகன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள், என்ன மொழியில் வரப் போகிறது என்ற வேறு எந்த விவரமும் இப்போது தெரியவில்லை.
பெரியார் வேடம் பூண்டு நடித்த சத்யராஜ், பிரதமர் மோடி வேடத்தில் நடிக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளன.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}