சென்னை: சோசியல் மீடியாவில் ட்ரெண்டான எனக்கொரு wife வேண்டுமடா என்ற குறும்படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் குறும்படம் மிகவும் நன்றாக இருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது என பாராட்டியுள்ளார்.
கடந்த மார்ச் 3ஆம் தேதி எனக்கொரு wife வேண்டுமடா என்ற குறும்படம், ஃபிலிம் டியூட் youtube சேனலில் ரிலீஸ் ஆனது. பத்து நிமிடம் ஓடும் இந்த குறும்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 22 வருடங்களாக பத்திரிக்கை துறையில் பணியாற்றிய ஜியா இந்த குறும்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல் இந்த குறும்படத்திற்கு முதல் முறையாக இசையும் அமைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்வன் என்ற குறும்படத்தை இயக்கியவர். இது இவருடைய இரண்டாவது குறும்படம் ஆகும். இந்த குறும்படத்தை ஃபிலிம் வில்லேஜ் நிறுவனம் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். பிரசாத் ஏ.கே எடிட்டிங் செய்ய, அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் செபாஸ்டின், அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மௌனிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த குறும்படம் ஹியூமர் கலந்த முழு நீள டிராமாவாக உருவாகியுள்ளதாம். மேட்ரிமோனியில் திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞன் ஒருவன், நான்கு பெண்களை சந்திக்கிறான். அப்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே இப்படத்தின் கதையாகும்.
இந்த நிலையில் இந்த குறும்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்த குறும்படம் மிகவும் நன்றாக இருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது. ஹியூமர் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ஜியாவுக்கு, அவரது மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதுபோல திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}