உதவி பண்ணுங்க.. வீடியோ போட்ட காமெடியன் வெங்கல் ராவ்.. உடனே ஓடி வந்து ஹெல்ப் செய்த நடிகர் சிம்பு!

Jun 26, 2024,04:50 PM IST
சென்னை: காமெடி நடிகர் வெங்கல் ராவின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார் நடிகர் சிம்பு.

காமெடி நடிகர் வடிவேலுவுடன் 30 படங்களுக்கு மேலாக நடித்தவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரு சண்டை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி, 25 வருட காலமாக ஸ்டண்ட் நடிகராக வலம் வந்தவர். பிரபல முக்கிய நடிகர்களுக்கு டூப் போட்டு சண்டைக் காட்சிகளில் பணியாற்றினார். 

சிறிது காலத்திற்கு பின்னர், காமெடி நடிகராக தனது  பயணத்தை தொடங்கியவர். வடிவேலுவுடன் பல்வேறு காமெடி காட்சிகளில் நடத்து பிரபலம் ஆனார். வடிவேலு படத்தில் நடிப்பது குறைந்த உடன் இவருக்கும் பட வாய்ப்புகள் போய் விட்டது. வயது மூப்பு காரணமாக பல்வேறு உபாதைகளுக்கும் உள்ளானார்.



இந்த நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக, ஒரு கை கால் செயலிழந்து விஜயவாடா அரசு மருத்துவமனையில் தற்போது வெங்கல் ராவ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தனக்கு சிகிச்சை செய்ய பண உதவி செய்யுமாறு வெங்கல் ராவ் நடிகர் நடிகைகளிடம் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 
எனது ஒரு கை கால் செயலிழந்து விட்டது. என்னால் நடக்க முடியவில்லை. சரியாக பேச முடியவில்லை. சிகிச்சை செய்ய என்னிடம் பணம் இல்லை. அதனால் சினிமா நட்சத்திரங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார் காமெடி நடிகர் வெங்கல்ராவ். 

இதனை பார்த்த நடிகர் சிம்பு  வெங்கல் ராவ் மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சத்தை வழங்கியுள்ளார். இது பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. எத்தனையோ பேர் மன அழுத்தத்திலும், சோகத்திலும் இருக்கும் போது சிரிக்க வைத்தவர்கள், அடுத்தவர்களின் கஷ்டத்தை போக்கியவர்கள் பலரின் வாழ்க்கை கடைசி நேரத்தில் சோகமாக மாறி விடுகிறது. பல காமெடி நடிகர்களின் கடைசிக்கால வாழ்க்கை பெரும் சோகத்தில்தான் இருந்துள்ளது.  வெங்கல் ராவுக்கு உதவிய சிம்புவுக்கு பாராட்டு குவிகிறது. அவருக்கு மற்றவர்களும் உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்