தப்புத்தான்.. இனிமே வடிவேலு பத்தி அவதூறாக பேச மாட்டேன்.. கோர்ட்டில் உறுதி அளித்த சிங்கமுத்து!

Dec 11, 2024,03:52 PM IST

சென்னை: Youtube சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் வடிவேலு, ஐந்து கோடி ரூபாய் கேட்டு தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் வடிவேலு பற்றி அவதூறான எந்த கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்திரவாத மனு தாக்கல் செய்துள்ளார்.


நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் வடிவேலு சிங்கமுத்து மீது மான நஷ்ட  வழக்கு தொடர்ந்தார். அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக அதனை ஈடு செய்ய ஐந்து கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறு பேச தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். 




இந்த வழக்கு கடந்த ஆறாம் தேதி விசாரணைக்கு வந்த போது சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவதூறு தெரிவித்த வார்த்தை எது என்பதை நடிகர் வடிவேலு குறிப்பிடவில்லை‌. மாறாக திரைத் துறையில் தெரிவித்த கருத்துக்களை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார் எனக் கூறினார். அதேபோல்  நடிகர் வடிவேலு தரப்பில் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பார்ப்புவதாக வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிங்கமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இனிமேல் வடிவேலு பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில்  பேசமாட்டேன்  என  உத்திரவாதம் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார்.


இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில், வடிவேலு குறித்து  எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன். வடிவேலு குறித்து வாய் மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிவிக்க மாட்டேன்  என உத்தரவாதம் அளித்து மனு செய்தார். இதனை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கை  ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்