இசைக்கிளியும் அன்னக்கிளியும் சந்தித்தபோது..சூர்யா, மகள் பிருந்தாவுடன் இசைஞானியை சந்தித்த சிவக்குமார்

Mar 19, 2025,04:58 PM IST

சென்னை: இசைஞானி இளையராஜாவை, அவரது முதல் படமான அன்னக்கிளியின் நாயகன் சிவக்குமார் தனது மகன் சூர்யா, மகள் பிருந்தாவுடன் சென்று சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தார்.


சிவக்குமார்-சுஜாதா இணைந்து நடித்த அன்னக்கிளி படம் தான் இளையராஜா இசையமைத்த முதல்படம். இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக அமைந்ததால் அன்று முதல் இளையராஜாவிற்கு சீசன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், மேற்கத்திய இசையுடனும், கர்நாடக இசையுடனும் இணைந்திருந்தன.  பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாசலம் ஆவார். 




இத்திரைப்படத்தில் பஞ்சு அருணாசலம் இராசய்யா என்ற பெயர் கொண்டவரை இளையராஜா என்று பெயரை மாற்றினார். பல்வேறு இசைக்கருவிகளின் நுட்பங்களை இப்படத்தில் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா. "மச்சான பார்த்தீங்களா" பாடல், இளையராஜா, அவரது இசைக்குழுவினரால் திரைப்பட வெளியீட்டிற்கு முன்பே ஒரு திருமணத்தில் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டது  என்று கூறப்பட்டதும் உண்டு. மச்சானை பாத்தீங்களா, அன்னக்கிளியே உன்னைத் தேடுதே உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் அப்படியொரு வெற்றியைப் பெற்றது.


சிவக்குமாரும், சுஜாதா, படாபட், ஜெயலட்சுமி ஆகியோர்  நடித்த இந்தப் படம் பஞ்சு அருணாசலம் தயாரித்ததாகும். இந்த படத்தின் டைரக்ஷனை தேவராஜ்-மோகன் கவனித்தனர்.  1976ம் ஆண்டு மே 14ம் தேதி வெளியாகியது. முதல் இரண்டு நாட்கள் சரியாக ஓடாத நிலையில், 3ம் நாளில் இருந்து தினமும் ஹவுஸ்புல் தானாம். அன்னக்கிளி படம் பல ஊர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. அதிலும் குறிப்பாக கோவை இருதயா தியேட்டரில் 205 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனையும் படைத்தது.  


இளையராஜா வந்த பிறகு, இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழகம், அப்படியே இளையராஜா இசையில் லயிக்க ஆரம்பித்தது. ‘அன்னக்கிளி’யை அடுத்து, வரிசையாக படங்கள் வர ஆரம்பித்தன இளையராஜாவுக்கு. தேவராஜ் - மோகன் இயக்கம், சிவகுமார், இளையராஜா கூட்டணி வெற்றிக் கூட்டணி எனப் பேசப்பட்டது. இந்தக் கூட்டணியில் வந்ததுதான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. பழமையையும் புதுமையையும் மோதிக்கொள்ளவிட்ட படம் தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாமன் ஒருநா மல்லிகப்பூ கொடுத்தான், வெத்தல வெத்தல வெத்தலயோ, என்னுள்ளில் ஏதோ ஏங்கும் கீதம், உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி என்று எல்லாப் பாட்டுமே செம ஹிட். 


அன்றைய காலகட்டத்தில் இந்தப் பாடலைப் பாடாத தெருக்களோ கல்யாணவீடுகளோ திருவிழாக்களோ மேடைக் கச்சேரிகளோ இல்லை. சிவகுமாருக்கு இந்தப் படம் 100வது படம். அட்டகாச வெற்றியைத் தந்தது. 79ம் வருடம் மே மாதம் 18ம் தேதி ரோசாப்பூ ரவிக்கைக்காரி வெளியானது. இவ்வாறாக பல வெற்றிப்படங்கள் சிவக்குமார்-இளையராஜா கூட்டணியில் வெளிவந்து வெற்றி அடைந்தன. அதன்பின்னர் ஒரு கட்டத்தில் சிவக்குமார் நடிப்பதை நிறுத்தி விட்டார். 




ஆனால் இளையராஜா இன்று வரை தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வலம் வருகிறார் என்றே சொல்லலாம். இவ்விருவரும் திரைப்படங்களிலில் மட்டும் இணைந்திருக்கவில்லை நட்பிலும் இன்று வரை இணைந்து தான் இருக்கின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சிம்பொனி இசை எழுதி அதை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாழ்த்து தெரிவத்து வருகின்றனர். 


இந்த நிலையில், நடிகர் சிவக்குமார் மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோருடன் நேரில் சென்று இளையராஜாவிற்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!

news

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!

news

கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !

news

புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

news

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்

news

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!

news

ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!

news

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்