மதுரை : சூட்டிங் ஸ்பாட்டில் சிறிதும் பந்தா இல்லாமல் யாரோ குழந்தைகளிடம் பேசிக் கொண்டுள்ளார் என்று பார்த்தால், அட அது நம்ம சூரி. சிறிதும் பந்தா இல்லாமல் இயல்பாக குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்த போது, கேரேவேனை பார்க்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சிறுவர் கூட்டமாக வந்து கேட்க, கொஞ்சமும் தயங்காமல் உடனே ஓகே சொல்லி, சுற்றியும் காட்டி உள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூரி. காமெடியனாக அறிமுகமாகி பல படங்களில் கலக்கிய சூரி, தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் அசத்தி வருகிறார். டைரக்டர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ள சூரி, தற்போது சினிமாவில் செம பிஸியாக நடித்து வருகிறார். தற்போது டைரக்டர் சசிகுமார் இயக்கும் கொட்டுக்காலி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

என்ன தான் சினிமாவில் பெரிய ஆளாக ஆகி விட்டாலும் எளிமையையும், ஊர் பாசத்தை மறக்காமல் இருந்து வருபவர். மதுரை மண்ணுக்கு சொந்தக்காரர். தற்போது இவர் நடிக்கும் கொட்டுக்காலி படத்தின் ஷூட்டிங் மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களை சுற்றி நடந்த வருகிறது. கேரோவேனில் ஷாட்டிற்கு தயாராகிக் கொண்டிருந்த சூரி, திடீரென வெளியில் கேட்ட சத்தத்தால் எட்டிப் பார்த்துள்ளார். சத்தம் போட்டு சூரியை வெளியில் வர வைத்தது வேறு யாரும் அல்ல. அத்தனையும் குட்டீஸ்கள். சூரியை பார்த்ததும் உற்சாகத்தில் கத்த துவங்கியதுடன், கேரோவனையும் சுற்றி பார்க்க வேண்டும் என சூரியிடம் கேட்டனர்.
அவர்களுடன் சூரி பேசிய போது,
சூரி: என்ன பாக்கனும் ?
குழந்தைகள்: இததான்
சூரி:உள்ள என்னா இருக்கு ?
குழந்தைகள்: பெட்ரூம் இருக்கு
சூரி:டேய் அது பெட் ரூம் இல்ல. அண்ணே மேக்கப் போடும் ரூம்டா அது..
என்று கூறி, அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் கேரோவனுக்குள் சென்று பார்க்க அனுமதித்தார். கேரோவனுக்குள் முடியடித்து ஏறிய குழந்தைகளில் ஒருவனை பார்த்து, "டேய் சோனமுத்தா...பாத்துடா" என சூரி சொன்னதும் அந்த இடமே கலகலப்பானது.
குழந்தைகளை கேரோவனுக்குள் ஏற்றியதுடன், வெளியில் வெயிலாக இருக்கும். வியர்க்கும். மேக்கப் போட முடியாதில்லையா? அதனால் வியர்க்காமல் மேக்கப் போட்டு விட்டு போய் நடித்து விட்டு, மீண்டும் வந்து ஓய்வு எடுப்பதற்கு தான் இந்த ஏசி போட்ட வேன். இதற்கு கேரோவன் என்று பெயர் என குழந்தைகளுக்கு விளக்கமும் அளித்தார் சூரி. இதை கேட்டு மகிழ்ச்சியாக கீழே இறங்கிய குழந்தைகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என சொல்லி அனுப்பி வைத்தார் சூரி.
இந்த கலகலப்பான ஜாலி வீடியோவை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, படப்பிடிப்பில் மகிழ்வித்து மகிழ்ந்த போது என கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். இது போல் தான் செல்லும் இடங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின் போட்டோக்கள், வீடியோக்களை தனது சோஷியல் மீடியாவில் உடனடியாக பகிர்வதை சூரி வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரது போஸ்ட் அனைத்திலும் அவரின் எளிமையும், நல்ல மனசு தெரிவதால் இவரது போஸ்டுகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் லைக்குகள் போட காத்திருக்கிறது எனலாம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}