அடி தூள்.. மீண்டும் ஹீரோ.. கலக்கல் சூரியின்.. புதுப்பட பூஜை!

Sep 11, 2023,04:01 PM IST
கும்பகோணம்: நடிகர் சூரி மீண்டும் ஹீரோவாக களம் இறங்குகிறார். அவரது அடுத்த படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டது.

சூரி, மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் புதுப்பட பூஜை இன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இப்பபத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, துரைசெந்தில் குமார் இயக்குகிறார்.

நடிகர் சூரி காமெடி நாயகனாகவும், பல குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் காமெடிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தனது முதல் படத்தில் பரோட்டா  சாப்பிடும்  போட்டியில் நடித்து ஏகப்பட்ட பரோட்டாக்களை சாப்பிடுவது போல நடித்ததால் இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரும் வந்தது.தனது நடிப்பால் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் சூரி. 



காமெடியனாக வலம் வந்த சூரியை, இயக்குநர் வெற்றிமாறன் அப்படியே அடியோடு மாற்றி ஹீரோவாக்கினார். விடுதலை என்ற படத்தில் முதன் முதலில்  ஹீரோவாக அறிமுகமானார் சூரி. இது மாபெரும் புரட்சி படமாக அமைந்து வெற்றியை தந்தது. இதன் இரண்டாவது பாகமும் விரைவில் வர இருக்கிறது.



இந்நிலையில் நடிகர் சூரி மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இதற்கான பூஜை இன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. விடுதலை  படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதுப் படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். இதில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்