திருச்செந்தூர்: உலகத்தின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் இளையராஜா. நானும் அவரது காலத்தில் நடிகராக இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன். அவரது பாடல்கள் வாழ்வியல் உண்மைகளை பிரதிபலிக்கும். இளையராஜா ஒரு புத்தகம் என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக உருவெடுத்த சூரி தற்போது கதாநாயகனாக உருமாறியுள்ளார். இவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், கடந்த ஆண்டு திருச்செந்தூர் முருகனை பார்க்க வந்திருந்தேன். அதே போல இந்த ஆண்டும் ஐயாவின் ஆசியை பெற வந்திருக்கிறேன். வரிசையாக நிறைய படத்தில் நடிக்க உள்ளேன். விடுதலை 2 இப்பொழுது வரப்போகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி என்று நினைக்கின்றேன். விடுதலை படத்தின் முதல் பாகம் எப்படி உங்களுக்கு அனைவருக்கும் பிடித்திருந்ததோ, அதேபோல விடுதலை 2வும் உங்களுக்கு பிடிக்கும்.

கங்குவா படம் நன்றாக உள்ளது. ஒரு ரசிகராக படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. என் குடும்பத்தோடு திரையரங்குக்கு சென்று பார்த்தேன். கங்குவா படம் குறித்து எதிர்மறையாக சிலர் கூறுகிறார்கள். அதை நம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்மறை விமர்சனங்களால் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர். அதிகமானோர் நேர்மறையாக சொல்கிறார்கள். கங்குவா பட குழு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். பல பேருடைய உழைப்பு இந்த படத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.
விடுதலை 2 திரைப்படத்தில் இளையராஜாவின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. உலகின் தலைசிறந்த மனிதர்களுள் இளையராஜா ஒருவர். 82 வயதிலும் இசையை எழுதி இசை அமைத்து பாடியிருக்கிறார். அவர் உள்ள சினிமாவில் நானும் ஒரு நடிகனாக இருக்கிறேன் என்பதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இசையமைப்பாளர் காலத்திற்கும் நாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான் இளையராஜா. இறைவன் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இளைராஜாவிற்கு கொடுத்து இன்னும் பல படங்களில் அவர் இமையமைக்க நான் இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}