சென்னை: சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்ற வந்த நிலையில் திடீர் என நடிகர் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 44. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. தீபாவளியை ஒட்டி சூர்யாவின் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்து சூர்யா 44 ரீலிசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தொடர்ந்து பல சிகக்கல்களை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்து வந்தது. அங்கு அடிக்கடி பாம்புகள் தொல்லை செய்ததால் சூர்யா அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் நடிக்க புக் ஆகியிருந்த உரியடி விஜயக்குமார் பாதியிலேயே விலகிக் கொண்டு விட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன. இந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அப்போது சூர்யா மற்றும் பூஜா ஹெட்டே இடையிலான ரொமான்டிக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த மாதம் 15ம் தேதி வரை ஊட்டியில் படப்பிடிப்பு நடக்க இருந்தது.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சூர்யா தற்பொழுது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சில நாட்களுக்கு ஓய்டு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சூர்யா முழு ஓய்வு எடுக்க இருப்பதாகவும், சூர்யா இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நிகழ்ந்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}