அம்மாடி.. இந்த ரீல்ஸ் பண்றவங்க இருக்காங்களே.. எங்களுக்கு பெரிய சவாலா இருக்கு.. தமன்னா அயர்ச்சி!

Jul 15, 2024,04:40 PM IST

சென்னை:   சோசியல் மீடியாவில் ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை ஈர்ப்பது நடிகர், நடிகைகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளதாக நடிகை தமன்னா உள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் நடிகை தமன்னா 2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் விஜய், அஜித், தனுஷ், ரஜினி, என பல முன்னணி நட்சத்திரங்களின் வெற்றி படங்களில்  இணைந்து நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என மும்மொழிகளிலும் தன்னுடைய நடிப்பின் திறமையை நிலைநாட்டினார். இதுவரை 50 படத்திற்கும் மேலாக நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் லைட்டான கிளாமருடன் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த தமன்னா பாலிவுட்டிற்கு சென்ற பிறகு முழு கவர்ச்சி நடிகையாகவே மாறிவிட்டார். இது தவிர தற்போது வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.




சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி தமிழ் ரசிகர்களை தம் பக்கத்திற்கு கொண்டு வந்தவர். இப்பாட்டு பட்டி தொட்டி எல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமன்னாவின் ஆட்டத்திற்காகவே ரசிக்கப்பட்டது. ஏன் ரஜினியே கூட பட விழாவில் தமன்னாவைப் பற்றி சிலாகித்துப் பேசியிருந்தார். இதுவரை எந்த படத்திலும் இது போன்று தமன்னா ஆடியது இல்லை. தமன்னாவா இப்படி என வாயடைத்துப் போகும் அளவிற்கு அவருடைய நடனத் திறமையை ஒரே பாடலில் வெளிப்படுத்தி தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர். 


சமீபத்தில் வெளியான அரண்மனை4 படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பால் மக்களிடையே பாராட்டைப் பெற்றவர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் சினிமா நடிகர் நடிகையருக்கு ரீல்ஸ் மேக்கர்கள் பெரும் சவாலாக உள்ளதாக தமன்னா கூறியுள்ளார். நடிகை தமன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்துக் கூறியதாவது:


சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதுதான்  இந்த நிலைமைக்கு கொண்டு வந்து என்னை இங்கு நிறுத்தி உள்ளது.  சினிமாவில் நுழைந்ததும்  எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனாலும் ஒரு நடிகையாக சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். இதற்காக 100% உழைத்தேன். இப்போது நான் சாதித்து விட்டேன் எனக்கு மகிழ்ச்சி.


ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தேன். ஆனால் இப்போது ஓடிடியிலும் படங்கள் நிறைய வருகின்றன. சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை ஈர்ப்பது நடிகர் நடிகர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. அவர்களுக்கு பிடித்த மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டியுள்ளது. சொல்லப்போனால் ரிலீஸ் எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.


உண்மைதான் சில ரீல்களைப் பார்த்தால் சினிமாவில் நடிப்பவர்களை விட அட்டகாசமாக செய்கிறார்கள். எப்படியெல்லாம் இப்படி யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட வைக்கிறது அவர்களின் கிரியேட்டிவிட்டி. உண்மையில் சினிமா பிரபலங்களுக்கு ஈடான பிரபலம் இவர்களுக்கும் கிடைத்து வருகிறது. இந்த எதார்த்தத்தைத்தான் தமன்னாவும் எதிரொலித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!

news

பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்

news

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்