- தி. மீரா
அந்த புதிய குடும்பம் வந்த பிறகு, தெருவின் காற்றே மாறியது போல இருந்தது.
முன்பு அமைதியாக இருந்த அந்த குடிசை வீடு, இப்போது குழந்தைகளின் சிரிப்பால் உயிர் பெற்றது.
அந்த இரண்டு குழந்தைகள் — கார்த்திக், காவ்யா.
முதலில் மிகவும் பயந்தபடி இருந்தார்கள். ஆனால் மீனா தினமும் பள்ளி முடிந்து வந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்ததும், மெதுவாக திறந்து பேச ஆரம்பித்தார்கள்.
“அக்கா, நான் பெரியவனாகி போலீஸ் ஆகணும்,” என்றான் கார்த்திக்.
“நான் டீச்சர் ஆகணும்,” என்றாள் காவ்யா வெட்கப்பட்டபடி.
அந்த கனவுகளை கேட்ட மீனாவின் மனம் நெகிழ்ந்தது.
கனவு காண்றதுக்கு பணம் தேவையில்லை… மனசு போதும், என்று நினைத்தாள்.
ஒரு மாலை…
மழை கொட்டித் தீர்ந்தது.
மின்சாரம் போயிருந்தது. தெரு முழுக்க இருள்.
அந்த நேரத்தில் காவ்யாவின் அம்மா ஓடிவந்து கதவைத் தட்டினாள்.

“மீனா… கார்த்திக்குக்கு காய்ச்சல் அதிகம். என்ன செய்யறதுன்னு தெரியல,” என்றாள் பதட்டமாக.
லட்சுமி உடனே உள்ளே அழைத்தாள்.
சாதாரண காய்ச்சல் இல்லை குழந்தை மிகவும் சோர்வாக இருந்தான்.
ஒரு நொடி கூட யோசிக்காமல் லட்சுமி தன் சேமிப்பு பணத்தை எடுத்தாள்.
“வாங்க, மருத்துவமனை போகலாம்,” என்றாள்.
மீனா கார்த்திக்கின் கையை பிடித்துக் கொண்டாள்.
அவன் மெதுவாக சொன்னான்:
“அக்கா… எனக்கு பயமா இருக்கு…”
“நான் இருக்கேன்,” என்றாள் அவள் நம்பிக்கையுடன்.
மருத்துவமனை
மருத்துவர் பார்த்து,
“கவலைப்பட வேண்டாம். அதிக காய்ச்சல் தான். நேரத்தில் கொண்டு வந்திருக்கீங்க,” என்றார்.
அந்த ஒரு வரி எல்லோருக்கும் உயிர் ஊட்டியது.
காவ்யாவின் அம்மா கண்ணீர் மல்க லட்சுமியின் கையைப் பிடித்தாள்.
“நீங்க இல்லையென்றா…” என்று சொல்ல முடியாமல் நின்றாள்.
லட்சுமி மெதுவாகச் சொன்னாள்:
“இது உதவி இல்லை. மனிதம்.”
அந்த இரவு வீட்டிற்கு திரும்பும்போது, மீனா சாளரத்துக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மழை நின்றுவிட்டது. வானத்தில் நட்சத்திரங்கள்.
அவளுக்கு ராமசாமி தாத்தாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
“அடுத்த முறை உதவி தேவைப்படுவது நானில்லை…”
இப்போ தான் புரிந்தது.
அவர் சொன்னது இவர்கள் பற்றிதான்.
ஆனால் அடுத்த நாள் காலை ஒரு எதிர்பாராத விஷயம் நடந்தது.
மீனாவின் வீட்டின் முன் ஒரு கார் நின்றது.
அதிலிருந்து இறங்கியவர்
பள்ளியின் தலைமை ஆசிரியர்.
“மீனா யார்?” என்று கேட்டார்.
அவள் குழப்பத்துடன் முன்னே வந்தாள்.
அவர் சிரித்தபடி சொன்னார்:
“உன்னைப் பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது… நல்ல செய்தி.”
என்ன செய்தி?
மீனாவின் சிறிய உதவிகள் இப்போது பெரிய மாற்றமாக மாறப் போகிறது.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?
பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)
பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!
சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
{{comments.comment}}