- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி மோகன்
காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து...
காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து !
மலர் பறிப்பதும் உன் கரங்கள் தான்!
மலையைப் பொடியாக்குவதும் உன் கரங்கள் தான்!
ஏற்றம் தரும் உழைப்பின் தித்திப்பு அது உழைப்பவருக்கு மட்டுமே முத்தாய்ப்பு !
சோம்பல் எனும் இருளைத் துரத்தி நீயும்
சாதனை எனும் ஒளியைத் தேடு !

பெற்றோர் இட்ட பெயரை விட நம் உழைப்பால் பெறும் பெயரே உயர்வு தரும்!
உழைப்பு என்பது சுமையல்ல ... நம் ஆன்மா தேடும் நல் வாழ்வின் அடையாளம்!
தன்னம்பிக்கை எனும் விதையைத் தூவி
தன்னிகரற்ற வெற்றியை அறுவடை செய் ! கைரேகைகள் அழிந்தாலும் கவலையில்லை! நம் உழைப்பின் சரித்திரம் ஒரு போதும் அழியாது !
விதியை நம்பி விழிமூடித் தூங்காதே...
மதி கொண்டு உழைத்தால் ....
மண்ணைத் தோண்டிப் பொன்னை எடுக்கும் உழைப்பின் வலிமை உனக்கே தெரியும்!
விடியல் உன் வாசலில் காத்திருக்க ....
உழைப்பின் பெருமை உனக்கே அருமை
உனக்கே அருமை !!!
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}