ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!

Apr 30, 2026,05:13 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed

 

இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவராகப் போற்றப்படும் ராஜா ரவி வர்மா அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


ராஜா ரவி வர்மா அவர்கள் ஏப்ரல் 29, 1859-ம் ஆண்டு பிறந்தார்.  சிறு வயதாக இருக்கும்போதே ஓவியம்  வரைவதில் ஆர்வமாக காணப்பட்டார். 


இயற்கை மற்றும் மனித உருவங்களை கவனித்து அவராகவே வரைந்து வரைந்து பயிற்சி எடுத்துக் கொண்டார். 

தன்னிடம் உள்ள ஓவியத் திறமையை வெளிப்படுத்தியவர். இதன் மூலம் இந்திய பாரம்பரிய கலைக்கு மேற்கத்திய ஓவிய முறைகளை இணைத்து புகழ்பெற்று காணப்பட்டார்.

 

எண்ணெய் ஓவிய முறையை (Oil Painting) இந்தியாவில் பிரபலப்படுத்தினார். மனிதர்களை மிகவும் இயல்பாக (realistic style) வரைவதில் மிகவும் புகழ்பெற்ற ஓவியராக காணப்பட்டார்.


Shakuntala, Damayanti Saraswati, Lakshmi போன்ற எண்ணற்ற ஓவியங்கள் இந்தியாவில் புகழ்பெற்ற ஓவியங்களாக காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் இந்திய கலாச்சாரத்தை உலகம் முழுவதும் போற்றப்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. இந்திய கலை உலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.




ராஜா ரவிவர்மா  ஓவியங்கள் இன்று அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகையான குலதெய்வ புகைப்படங்களும், இஷ்ட தெய்வங்களின் புகைப்படங்களும் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ராஜா ரவிவர்மா ஆவார். 


அவர் உருவாக்கிய ஓவியங்கள் புராண கதைகளை உயிரோட்டமாக காட்சி அளிப்பதற்கு காரணமாக இருந்தன. 

இந்திய பெண்களின் அழகை மிக அழகாக சித்தரித்து ஓவியங்களை வரைந்து உள்ளார்.


அவரின் படைப்புகள் அனைத்து இன்றைய கலை மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் காணப்படுகின்றன.


1906-ம் ஆண்டு அவர் இந்த மண்ணை விட்டு நீங்கினாலும் அவரின் கலைப்பணிகள் இன்றும் உயிருடன் வாழ்கின்றன என்பதை உணர்ந்து நாம் பெருமை அடைவோம்.


இன்றைய நாளில் நாம் அனைவரும் நமக்கு தெரிந்த ஓவியங்களை வரைந்து கொண்டாடுவோம் .


சிறு குழந்தைகளை சிந்தித்து ஓவியம் வரைவதற்கு நாம் தூண்டுகோலாக இருப்போம் .


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

அதிகம் பார்க்கும் செய்திகள்