தெய்வமும் பெண்ணும்!

Apr 30, 2026,01:04 PM IST

- வே. ஜெயந்தி


எங்கும் கோயில்கள்

அம்மன் பெயரில்,

ஆனால்

வீடுகளில்

பெண்ணுக்கு

ஒரு மூலையும் இல்லை.


கர்ப்பகிரகத்தில்

அவள் சக்தி,

சமையலறையில்

அவள் கடமை.


பூமியைத் தாங்கும்

தாயை வணங்கினோம்,

ஆனால்

அவள் கருத்தைத் தாங்க

மனம் வளர்க்கவில்லை.




நீரை அருளும்

மாரியம்மன்,

நீதியை வழங்கும்

காளி

அவள் கோபம்

தெய்வீகம்.


அதே கோபம்

பெண்ணிடம் வந்தால்

“அடக்கம் இல்லை”

என்று தீர்ப்பு.


விரதம் இருந்தாள்,

பூஜை செய்தாள்,

விளக்கேற்றினாள்

ஆனால்

கேள்வி கேட்டால்

பாவி ஆனாள்.


வழிபாட்டில்

அவள் அவசியம்,

முடிவுகளில்

அவள் தேவையில்லை.

பெண்ணை

தெய்வமாக வைத்தோம்,

மனிதராக

வாழ விடவில்லை.


இப்போது

அம்மனிடம் கேட்கிறேன்

என்னை வணங்கும்

இந்த மனிதன்

என் மகளுக்கும்

உன் சக்தியை

அனுமதிப்பானா?


(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

அதிகம் பார்க்கும் செய்திகள்