- தி. மீரா
மீனாவின் கை நடுங்கியது. மரத்தடியில் கிடந்த அந்தச் சிறிய காகிதத்தை அவள் மெதுவாக எடுத்தாள். அதில் அழகான கைஎழுத்தில் எழுதப்பட்டிருந்தது:
“மீனா,
உன் அன்பு எனக்கு உயிர் கொடுத்தது.
நான் உன்னை மீண்டும் பார்க்க வருவேன்.
– தாத்தா”
அவளின் கண்கள் ஈரமானது. அவர் எங்கே போனார்? ஏன் சொல்லாமல் போனார்? என்று மனதில் பல கேள்விகள். அந்த இரவு மீனா அமைதியாக இருந்தாள்.
அம்மா கவனித்தாள்.
“என்னம்மா? இன்று சிரிப்பே இல்ல?”

மீனா காகிதத்தை காட்டினாள். லட்சுமி அதை வாசித்து மெதுவாக சொன்னாள்:
“சிலர் நம்ம வாழ்க்கையில் வர்றது ஒரு காரணத்துக்காக. அவர்களால நமக்கு நல்லது கற்றுக்கிடைக்கும்.”
அந்த வார்த்தைகள் மீனாவை சற்றே சமாதானப்படுத்தின. ஒரு வாரம் கழித்து… பள்ளியில் “நல்லெண்ண நாள்” கொண்டாட்டம்.
ஒவ்வொரு மாணவரும் சமூகத்துக்கு உதவிய ஒரு அனுபவத்தை பகிர வேண்டும்.
மீனாவின் முறை வந்தது. அவள் தாத்தாவைப் பற்றிய கதையை சொன்னாள். முழு வகுப்பும் அமைதியாகக் கேட்டது. சிலரின் கண்களில் நீர். ஆசிரியர் பெருமையுடன் சொன்னார்:
“இதுதான் உண்மையான மனிதம்.”
அன்று மாலை, பள்ளி முடிந்து வெளியே வந்த மீனா கதவின் அருகில் ஒரு கார் நின்றதைப் பார்த்தாள். அதன் அருகில் நின்றிருந்தவர் யார் தெரியுமா?
ராமசாமி தாத்தா!
ஆனால் இப்போது அவர் சுத்தமான வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்திருந்தார். முகத்தில் ஒளி. மீனா ஆச்சரியத்தில் ஓடினாள்.
“தாத்தா!”
அவர் சிரித்தார்.
“மீனா, உன்னால தான் நான் இப்போ இப்படி நிற்கிறேன்.”
அவர் சொன்ன கதை அதைவிட ஆச்சரியம். அன்று உடல்நிலை மோசமாக இருந்ததால் ஒரு பழைய நண்பர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்பதை அறிந்து, முன்னாள் மாணவர்கள் உதவினர்.
“ஆனா,” என்றார் தாத்தா,
“எனக்கு வாழணும் என்ற மனசு வந்தது உன் அன்பால தான்.”
அவர் ஒரு சிறிய பையை கொடுத்தார். அதில் புத்தகங்கள்.
“இது உன் படிப்புக்கு. நீ பெரியவளா ஆகணும். நல்ல மனசு உள்ள டாக்டரா ஆகணும்.”
மீனாவின் கண்களில் கண்ணீர் துளிகள் பிரகாசித்தது. அது சோகமல்ல — மகிழ்ச்சி. அந்த நிமிடம் அவள் புரிந்துக் கொண்டாள்:
ஒரு சிறிய அன்பு, ஒருவரின் வாழ்க்கையையே மாற்ற முடியும். ஆனால்…
தாத்தா போகும் முன் சொன்ன ஒரு வார்த்தை மீனாவை ஆழமாக சிந்திக்க வைத்தது:
“மீனா, அடுத்த முறை உதவி தேவைப்படுவது நானில்லை…”
அவர் யாரை குறிக்கிறார்?
(தொடரும்…)
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}