RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

May 01, 2026,04:34 PM IST

- மொழிப்பித்தன் இரா.ச. குமார்


அடர்த்தியான பின்னிரவை

அப்படியே எழுத முடியுமா என்னால்

இப்படியுமொரு 

வினா எனக்குள்...


முடியும் முடியாதென

வரையறுத்து விட முடியாது

எல்லாம் எழுத முயற்சி...


முயற்சிதான்

இருந்தும்

விடுபடலாம் 

அதிலும் ஒன்றிரண்டு...




அதன் முன்பே

இருளை உள்வாங்கல்

அவசியமாகிறது

பின்பே

காரிருள் கிழித்து மொத்தமாய் 

ஊடுருவி 

அடர் இருளுக்குள் புக வேண்டியதுமாகிறது...


அவசியமெனில் வரிகளுக்குள்

இருளை பூசி 

இருள் இப்படியாகத்தான் இருக்குமென

வர்ணித்து

ஒரு வரையறை தர வேண்டியதாகிறது...


கருப்பிலே கூட மங்கலானது

அடர் கருப்பென இரண்டு

இதில் 

இதுதான் கருப்பென

எதை சொல்லி

கவிதைக்கு இறுதி வடிவம் தருவது...


மரக்கிளைகளில் 

படிந்திருக்கும் இருள்

அப்புறப்படுத்த முயலும்

பிறை நிலவு

இதையும் வரியாக்கி விடலாமா?


அதிபயங்கர கருப்பென குறிப்பெழுதி விட முடியாது

காரணம்

தூரத்து வானத்தில்

மங்கிய வெளிச்சத்தில்

ஒன்றல்ல ஓராயிரம் விண்மீன்கள்

ஆக

அதிபயங்கரமென சொன்னால்

மையிருட்டைக் காட்டி

மங்கிய கருப்போடு ஒப்பிட வேண்டும்...


எது எப்படியோ

உறக்கம் தொலைத்ததில் 

கிடைத்தது 

ஒன்றல்ல ஓராயிரம் கரு கவிதைக்கு...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்