- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
உழைப்பே உயர்வைத் தரும் என்னும் பழமொழிக்கு ஏற்ப இரவு பகல் பாராமல் குடும்பத்திற்காக அயராது உழைக்கும் அனைவருக்கும் உலக தொழிலாளர் தின வாழ்த்துக்கள் .
உலக தொழிலாளர் தினம் (International Workers' Day / Labour Day) மே 1 அன்று உலக தொழிலாளர்களின் உரிமைகளை கௌரவிக்கும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நேரத்தை கோரி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதை நினைவு கூறுவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர்களின் உழைப்பை மதிப்பதற்காகவேலை நேரம், சம்பளம் போன்ற உரிமைகள் கிடைக்க பாடுபட்ட தொழிலாளர்களை நாம் இந்த நாளில் நினைவு கூர்ந்து பார்ப்பது நமது ஒவ்வொரின் கடமையாகும் .
தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு முதல் மே தினம் கொண்டாடப்படுகிறது.
எந்தத் தொழிலும் இழிவான தொழிலும் கிடையாது. *செய்யும் தொழிலே தெய்வம்* என்பதை போல் ஒவ்வொருவர் செய்யும் தொழிலும் உயர்வான தொழிலே ஆகும்.
நன்றாக படித்தவர்கள் நல்ல வேலையில் சேர்ந்து விடுவார்கள் .நன்றாக படிக்கவில்லை என்றால் கூலித்தொழில் செய்வார்கள் என்று கருதுவது தவறானதாகும்.
விவசாயமே நமது இந்தியாவின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து நாம் விவசாயி தொழில் செய்வதை பெருமையாக கருத வேண்டும்.
பள்ளி, கல்லூரி முறையாக பாடத்தை படித்து,ஆசிரியர், பொறியாளர் ,மருத்துவர் ,விஞ்ஞானி போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் அனைவரையும் நாம் இந்த நாளில் போற்றிடுவோம் .
வாழ்நாளில் சம்பளமே பெறாமல் குடும்பத்திற்காக உழைக்கும் இல்லத்தரசிகளை இன்றைய நாளில் சிறப்பாக போற்றிடுவோம்.
குறைவான சம்பளத்திற்கு வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளையும் நாம் இந்த நாளில் பாராட்டிடுவோம்.
குடும்பத்திற்காக தனது கஷ்டத்தை மறந்து உழைக்கும் அனைத்து உழைப்பாளிகளையும் இன்றைய நாளில் நாம் மதித்து விடுவோம் .
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் வேலைக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க பொதுமக்களாகிய நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
ஒவ்வொருவரும் குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}