ராமேஸ்வரம்: விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வந்தா தப்பு இல்லையே என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சட்டசபைத் தேர்தலே தங்களது இலக்கு என்றும் தெளிவுபடுத்தி விட்டா். இந்த நிலையில் விஜய்க்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த நடிகர் வடிவேலுவிடம் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தனது பாணியில் ஜாலியாக பதிலளித்தார் வடிவேலு.
அவர் கூறுகையில், எல்லாருமே வரலாமே.. ஏன் நீங்க கூட வரலாமே.. வரலாமா.. என்னாது வேலை இருக்கா.. தலைவா, உங்களைத்தான்.. இப்படியே எவ்வளவு நாள்தான் வீடியோ பிடிச்சுட்டு நிப்பீங்க.. டக்குன்னு வரலாம்ல.. வாங்க, எல்லாரும் வாங்க.. கட்சி ஆரம்பிச்சுட்டுப் போக வேண்டியதானே.. மக்களுக்கு நல்லது செய்ய யாரா இருந்தாலும் வரலாமே.. யாரும் வரக் கூடாதுன்னு சொல்லக் கூடாதுல்ல.
எல்லோரும் வந்தாங்க.. டிராஜேந்தர் வந்தாரு.. ராமராஜன் வந்தாரு.. பாக்யராஜ் வந்தாங்க.. எல்லாரும் நல்லது செய்யத்தானே வந்தோம்.. வரட்டும்.. வர்றவங்களை வரவேற்கணும். வந்து மக்களுக்கு நல்லது செய்ட்டும். தப்பு கிடையாதுல்ல.. வரட்டும். அவ்வளவுதானே என்று கலகலப்பாக பேசி விட்டுக் கிளம்பினார் வடிவேலு.
விஜய்யும் வடிவேலுவும் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளன என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வடிவேலு ஆதரித்து வரவேற்றிருக்கிறார். விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கும்போது அவருடன் சேர்ந்து வடிவேலுவும் ஆதரவாக களம் குதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}