சென்னை: 78வது சுதந்திர தினத்தையொட்டி மக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மகிழ்ந்தனர். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றினர்.
நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசுகள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் பெரும் ஆர்வத்துடன் தங்களது வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றினர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மகிழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத் திருநாளை, நாம் அனைவரும் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறோம். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த, ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடி (#HarGharTiranga) ஏற்ற வேண்டும் என்ற அறிவுரையின்படி, இன்று காலை சென்னையில் எனது இல்லத்தில் நமது பெருமைமிகு தேசியக் கொடியினை ஏற்றி வணங்கினோம்.
உலக அரங்கில் நமது பாரதத்தின் பெருமை மிகுந்த தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறப்பது நமக்கெல்லாம் பெருமிதத்தைத் தருகிறது. எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தினால் பெற்ற சுதந்திரத்தினைப் பேணிக் காப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் வீட்டில் பறந்த தேசியக் கொடி
இதேபோல விஜய்யின் திருவான்மியூர் வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதேபோல பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திலும் தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தது. இதை விஜய் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரப்பி வருகின்றனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}