சென்னை: நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க கட்டிடப்பணி சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதி கிடைக்காததினால் பாதியில் கட்டிபணி நடைபெறாமல் நின்று விட்டது. இந்நிலையில் அந்த கட்டிடப்பணியை முடிக்க இன்னும் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இதற்காக வங்கியில் நடிகர் சங்கம் சார்பில் நிதி கேட்கப்பட்ட போது, குறைந்த பட்சம் வைப்புத்தொகையாக ரூ.13 கோடி ரூபாய் டெபாசிட் செய்தால் தான் கடன் வழங்கப்படும் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கமலஹாசன், கார்த்தி ஆகியோர் தலா ஒரு கோடி வழங்கிய நிலையில், இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார். தனது வங்கிக் கணக்கு மூலம் இந்த ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளார் நடிகர் விஜய்.
இதற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடர எதுவாக நடிகர் விஜய் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் வழங்கிய நிதியுடன் சுமார் ரூ.12 கோடி நிதி வைப்புத்தொகையாக உள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}