சென்னை: பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி நடிகர் விஜய் அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது பிறந்த கொண்டாடினார். இதையடுத்து அன்புமணி ராமதாஸை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் நடிகர் விஜய். இந்த பேச்சு ஐந்து நிமிடங்கள் நீடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் லியோ படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வந்தது. பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. லியோ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களையும், லைக்ஸ்களையும் பெற்றது. ஆனால் லியோ படத்தின் ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .
மறுபக்கம், நடிகர் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில்தான் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்பது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளனுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் குதிக்கவிருப்பதால் இப்போதே அரசியல் தலைவர்களுடன் ஒரு நட்புணர்வை விஜய் ஏற்படுத்த ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
{{comments.comment}}