விஜய் வீட்டுக்குள்ளிருந்து நைசாக வெளி வந்த கார்.. WOW.. ஆத்தாடி என்ன விலை தெரியுமா..?

Aug 14, 2024,05:31 PM IST

சென்னை: நடிகரும், தமிழக கட்சி கழகத்தின் தலைவருமான விஜய் புதிய லெக்சஸ் LM 350h சொகுசு எம்பிவி காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூபாய் 2.50 கோடிக்கும் அதிகமாக கூறப்படுகிறது.


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் ஒரு கார் பிரியர். மார்க்கெட்டில் வெளியாகும் புதிய மாடல் கார்களை வாங்குவது அவரது ஹாபி என  பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறி இருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு  ரோல்ஸ் ராயல்ஸ் கோஸ்ட் என்ற காரை வாங்கி இருந்தார். அப்போது இந்த காருக்கு முறையாக வரி செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையை தீர்க்க நீதிமன்றம் வரை சென்றார் நடிகர் விஜய்.




இந்த நிலையில், நடிகர் விஜய் மீண்டும் ஒரு சொகுசு காரை வாங்கி இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படாமலும் இருந்து வந்தது. இந்த நிலையில்  நடிகர் விஜய்  சொகுசு கார் வாங்கியது உறுதியாகி உள்ளது. ஏனெனில் நடிகர் விஜய் வாங்கிய புதிய லெக்சஸ் LM 350h சொகுசு எம்பிவி கார் விஜயின் வீட்டை விட்டு வெளியே வருவது போன்ற  வீடியோ தற்போது வெளியாகி சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது.


இதன் மார்கெட் விலை 2.5 கோடிக்கு அதிகமாம். இந்த கார் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து அதன் உட்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். மேலும் தவெகவின் மேம்பாட்டிற்காக முதல் மாநாட்டை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக அக்கட்சி தீவிர ஆலோசனையும் நடத்தி வருகிறது. 


இதற்கிடையே நடிகர் விஜய் நடத்தி வரும் கோட் படத்தின் ரிலீஸுக்கு பிறகே கட்சியின் கொடி மற்றும் சின்னம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது. கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 69 வது படத்தை முடித்துவிட்டு முழு நீள அரசியலில் இறங்க இருக்கிறார் விஜய் என்பது நினைவிருக்கலாம். தற்போது விஜய் வாங்கியுள்ள இந்தக் காரை வைத்து செமத்தியாக பேக்கிரவுண்ட் மியூசிக் சேர்த்து பலரும் அதைக் கொண்டாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்