சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தனது ஜனநாயக கடமையை முடிந்த கையோடு வாக்களிக்க வந்த 80 வயது முதாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கப்பதிவு தொடங்கியதில் இருந்தே பிரலங்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் என அனைத்து தரப்பினர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி வரிசையில் நின்று வாக்களித்தார். இவர் தென்மேற்கு பருவகாற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
பெரும்பாலானவர்கள் நடிகர் நடிகைகளுடன் நின்று தான் செல்பி எடுத்துக்கொள்வார்கள். ஆனால் விஜய் சேதுபதி தனது வாக்கிணை பதிவு செய்து விட்டு 80 வயதுடைய மூதாட்டியுடன் செல்பி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகின்றது.
அப்புறம் மக்களே நீங்க ஓட்டுப் போட்டாச்சா.. போடாட்டி இப்பவே கிளம்பிப் போய் அதை செஞ்சு முடிங்க புண்ணியமாப் போகும்!
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}