திருவனந்தபுரம்: நடிகர் விஜய் கேரளாவில் தொடர்ந்து அலை பரப்பி வருகிறார். தன்னை காண வந்த ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசி செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் நடிகர் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதிநவீன தொழில் நட்ப வசதியுடன் கூடிய இந்த படமானது முக்கிய காட்சிகளுக்காக கேரளாவுக்கு இடப்பெயர்ந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடிகர் விஜய் அங்கு முகாமிட்டுள்ளார். விஜய்க்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விஜய் வருகையை தொடர்ந்து அவரைக் காண தினசரி படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகின்றனர். விஜயும் ரசிகர்களை கண்டு அவர்களுடன் மைக்கில் பேசியும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.
நேற்று இதைப் போல விஜயை காண ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். அவர்களிடையே படப்பிடிப்பு வேன் மீது ஏறி நின்று விஜய் வழக்கம் போல பேசினார். செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அனியத்திமார் அனியன்மார் சேட்டன்மார் சேச்சிமார் அம்மமார் என்று மலையாளத்திலேயே கூறி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். விஜய் தொடர்ந்து கேரளாவில் பரபரப்பில் வைத்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}