சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த வாரம் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் விஜய் அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்து விட்டார். மீண்டும் ஒரு கோலாகலமான விழாவாக இது நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் 10 மற்றும் 12 வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த ஆண்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தடுக்க இந்த வருடம் கல்வி விருது வழங்கும் விழாவை இரண்டு கட்டமாக நடத்த தமிழகம் வெற்றிக் கழகம் திட்டமிட்டது.
அதன்படி முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த வாரம் 28ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில் 725 மாணவர்கள் உட்பட மொத்தம் 3500 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக கட்சி கழகம் சார்பில் நடைபெறும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதற்காக நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் அதிகாலையிலேயே வந்து விட்டார். தற்போது விஜய் பேசி வருகிறார். இதையடுத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}