சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நாளை சென்னை பனையூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துகிறார் தவெக தலைவர் விஜய்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்று ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அப்போது கமிட்டான படங்களில் நடித்து முடித்து விட்ட பின்னர் கட்சியில் முழுமையாக இறங்கி 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படியே தற்போது ஒவ்வொரு வேலையாக செய்யத் தொடங்கியுள்ளார்.
இரண்டு படங்களில் நடித்து முடித்த பின்னர் தான் கட்சி வாழ்க்கைக்கு வருவதாக கூறியிருந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள நிலையில், செப்டம்பர் 5ம் தேதி இப்படம் ரீலிஸ் ஆக உள்ளது. அதற்கு அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசிப்படத்தை நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் இறுதியில் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார் விஜய். முதல் மாநாட்டிற்கு முன்னரே கட்சிக்கொடியை அறிமுகப்படுத்த நினைத்த நடிகர் விஜய். அதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறார். நாளை கட்சிக்கொடி அறிமுக விழா காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள விஜய் கட்சி ஆலுவலகத்தில் பிரம்மாண்ட கொடி மரம் அமைக்கப்பட்டு அதில், மஞ்சள் நிறத்தில் விஜய் முகம் பொறிக்கப்பட்டிருந்த கொடி எற்றி முன்னோட்டம் காணப்பட்டுள்ளது. இந்த கொடி கட்சிக் கொடி இல்லை என்றும், சம்பிரதாயத்திற்காக ஏற்றப்பட்ட கொடி என்றும் கூறப்பட்டு வருகிறது.
எது எப்படியோ நாளை தெரிந்து விடும் உண்மையான கட்சிக் கொடி எது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. விஜய்யின் ஒவ்வொரு செயலையும் தமிழக மக்கள் தற்போது உண்ணிப்பாக கவனிந்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்று விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் தற்போது எதிர்பார்த்து காத்துள்ளனர்.
விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பின்னர் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அனுமதியைப் பெற்று கொடிக் கம்பங்கள் அமைத்து புதிய கொடியை ஏற்ற விஜய் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள்
இந்நிலையில், நாளை நடைபெறும் கொடி அறிமுக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தவெக கட்சி அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பிரம்மாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று நேரில் பார்வையிட்டார்.
கொடி ஏற்ற முன்னோட்ட நிகழ்ச்சியின்போது மஞ்சள் வேட்டி, சட்டையில் வந்திருந்த புஸ்ஸி ஆனந்த் இன்று வழக்கமான வெள்ளை நிற உடையில் காணப்பட்டார். நாளைய கூட்டத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க துபாயில் இருந்து 20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}