போர் போட்டு.. 2 சின்டெக்ஸ் டேங்க்கும் வாங்கிக் கொடுத்த விஷால்.. மக்கள் ஹேப்பி!

Oct 10, 2023,11:53 AM IST
- சங்கமித்திரை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே எம் குமாரசக்கனாபுரம் கிராமத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுத்து கூடவே தண்ணீரை சேமித்து வைக்க 2 சின்டெக்ஸ் தொட்டியும் வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது   Vishal34 படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்தப் படத்தின் படப்பிடிப்பு  தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. 



படப்பிடிப்பின்  இடைவெளியில் எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷாலை சந்தித்து குடிநீர் வசதி இல்லாமல் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும்  தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படியும் கோரிக்கை  வைத்தனர், 

அக் கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்த நடிகர் விஷால், 
தனது மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல இயக்கத்தின்  தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரகாஷ், எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து கலந்தாய்வு செய்து இதுதொடர்பாக என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார். 

அதன் பின்னர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம் மக்கள் பயன்பெறும் வகையில் நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு (போர் போடும்) வேலை முடித்து பொது மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் அவர்களுக்கு 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.

இந்த புதிய வசதி அந்தக் கிராம மக்களின் பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்துள்ளது. மக்கள் கொடுத்த கேரிக்கையை உடனே நிறைவேற்றிய நடிகர் விஷாலுக்கு கிராம மக்கள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்