- மஞ்சுளா தேவி
சென்னை: மிச்சாங் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த, நடிகர் விஷால் பேச்சுக்கு மேயர் பிரியா ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடிகர் விஷால் அரசாங்கத்திற்கு தனது கோரிக்கைகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், வணக்கம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்ப பெய்கின்ற புயல் மழையால் முதலில் கரண்ட் ஆஃப் ஆகிவிடும். அப்புறம் தண்ணீர் தேங்கிவிடும். அப்படியே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடும். இப்ப நான் அண்ணா நகரில் வசிக்கிறேன். என் வீட்டிற்குள் ஒரு அடி வரையில் தண்ணீர் புகுந்து விட்டது. அண்ணா நகரிலேயே இந்த நிலைமை என்றால்.. நீங்க யோசித்துப் பாருங்கள். தாழ்வான பகுதியில் எவ்வாறு இருக்கும் என்று.
2015இல் இதேபோன்று தண்ணீர் வந்தபோது பொது மக்களுக்கு அனைவரும் இறங்கி சேவை செய்தோம். தற்போது 8 வருடம் கழித்தும் அதைவிட மோசமான நிலைமை உள்ளது. இது கேள்விக்குறியாக உள்ளது. எங்கே ரெயின் வாட்டர் ஸ்டோரேஜ் என்ற ப்ராஜெக்ட்..? சென்னை கார்ப்பரேஷன் எங்கே தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு விண்ணப்பம் தான். நான் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கேட்கிறேன். நடிகனாக நான் என்றும் கேட்கவில்லை. சென்னையில் உள்ள தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியே வந்து இதனை சரி செய்து கொடுக்கணும்.

பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டாம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து இதனை சரி செய்து கொடுத்தால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். இருட்டில் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர்கள் இருப்பார்கள். இது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை.
தி நகரில் ஒரு சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது. இப்ப எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கிகிறது . இது ரொம்ப தர்ம சங்கடமான கேவலமான விஷயமாக பார்க்கிறேன். இதற்கு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ..? அரசாங்கம் உடனடியாக தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம எல்லோரும் குடிமக்கள். நாமும் வரி கட்டுகிறோம். எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்தடாதீர்கள். எல்லோரும் தொகுதி எம் எல் ஏ ஏதாவது உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் .
இந்த சூழ்நிலையில் உங்கள் முகம் தெரிந்தால் நல்லா இருக்கும் என நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்.
மேயர் பிரியா பதிலடி
நடிகர் விஷால் பேசியதற்கு பதிலடி கொடுத்து பிரியா ராஜன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், செம்பரம்பாக்கம் ஏரியை கூட முன்னறிவிப்பு இன்றி திறந்து விட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது .பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மற்றும் மாநகராட்சி ஊழியர்களும் ,செய்து வருகிறார்கள்.
அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றி தரும்..!! என பதிலடி கொடுத்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}