சென்னை: நடிகர் விஷாலுக்கும் தனக்கும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகிடா படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் விஷால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இந்த கிசுகிசு மேலும் உறுதியானது.
விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயக்குமார் மற்றும் நடிகர் ராதா ரவி ஆகியோர் இந்த கிசுகிசுப்பை உண்மையாக்கினர். இருவரும் மேடையில் வைத்து பகிரங்கமாக இருவரையும் வாழ்த்தினர். அதிலும் ஆர்.வி. உதயக்குமார், விஷால் ஒரு குழந்தை, அந்தக் குழந்தையை பத்திரமாக பாத்துக்கம்மா என்று சாய் தன்ஷிகாவைப் பார்த்துக் கூற, வெட்கப்பட்டு தலை குணிந்தபடி இருந்தார் விஷால்.

இந்த நிலையில் அதே மேடையில் வைத்து தங்களது காதலையும், திருமணத் தேதியையும் அறிவித்தார் சாய் தன்ஷிகா. ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார் சாய் தன்ஷிகா. நடிகர் விஷாலும் மேடையில் பேசும்போது இங்கு சாய் தன்ஷிகாவின் தந்தையும் இருக்கிறார். அவரது ஆசிர்வாதத்துடன் எங்களது திருமணத்தை அறிவிக்கிறேன். தன்ஷிகா அருமையான பெண் என்று புகழ்ந்து பேசினார்.
இதன் மூலம் கோலிவுட்டில் மீண்டும் ஒரு பிரமாண்ட நட்சத்திரத் திருமணம் அரங்கேறப் போகிறது. மேலும் கோலிவுட்டில் நீண்ட காலமாக பேச்சலராக இருந்து வந்த விஷால் அந்த வளையத்திலிருந்து குடும்பஸ்தனாக மாறப் போகிறார். அவரது செட்டைச் சேர்ந்த நடிகர்கள் ஜீவா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்டோர் ஏற்கனவே திருமணமாகி செட்டிலாகி விட்ட நிலையில் விஷால் மட்டும் பேச்சலராகவே வலம் வந்து கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}