சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு நடிகர் வைபவ் அஞ்சலி செலுத்தினார்.
தனக்கென்று தனி பானியை உருவாக்கி நகைச்சுவையின் மூலம் மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் விவேக். சின்ன கலைவாணர் என்ற சிறப்பு பெயருக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17ம் தேதி இறந்தார். இவரின் திடீர் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அப்துல் கலாமின் வழியை பின்பற்றி பல இடங்களில் பல லட்சம் மரங்களை நட்டவர் விவேக். அவர் இறந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் நினைவாக பலரும் மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ். நடிகர் வைபவின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

நடிகர் வைபவுடன், நடிகரும், விவேக்கின் மிக நெருங்கிய நண்பருமான செல்முருகனும் இணைந்து இதில் ஈடுபட்டார். மேலும் படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}