சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் இருவரும் சபரிமலைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் ரவி மோகன் மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் அடிப்படையில் நல்ல நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.ஜெயம் ரவி என்ற தனது பெயரை சமீபத்தில் ரவி மோகன் என்று மாற்றியுள்ளார். தற்போது ரவி மோகன் மற்றும் கார்த்தி ஆகியோர் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளனர்.

நடிகர் கார்த்தி வா வாத்தியார் மற்றும் சர்தார் ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அதே போல நடிகர் ரவி மோகனும் காராத்தே பாபு, ஜீனி திரைப்படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனி ஒருவன் 2 படத்திலும் ரவி மோகன் விரைவில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரவி மோகன் மற்றும் கார்த்திக் இருவரும் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இருவரும் மலையணிந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரவி மோகன் ஏற்கனவே ஐயப்பன் மலைக்கு சென்று அனுபவம் கொண்டவர். கார்த்தி முதல் முறையாக விரதம் கடைப்பிடித்து சபரிமலைக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் சேர்ந்து சபரிமலைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}